Sunday, January 3, 2010

illango adigal

இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதினார். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது.

இளங்கோ பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன்[1]. சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.
சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இதை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலை சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர். சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் ஆவார். சிலப்பதிகாரம் புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. சமண மதத்தைச் சார்ந்த முனிவரான இளங்கோ, தன்னுடைய காவியத்தின் எவ்விடத்தும் தனது மதக் கருத்துக்களையோ, அல்லது தனது சேர நாட்டின் பெருமையை மற்ற நாடுகளை இழித்துரைத்தோ கூறாதது இந் நூலின் நடுநிலைமைக்கு மேலும் அணி சேர்ப்பதாக திகழ்கிறது.



சிலப்பதிகாரத்தில் இலக்கியம்

சிலப்பதிகாரம் வெறும் கற்பனைக் காப்பியமல்ல. அது, தமிழ்சமுதாயத்தின் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சார மேம்பாட்டினையும், வாழ்க்கை நெறிமுறைகளையும்
விளக்கும் வரலாற்று நூல்.”மனிதர் யாரும் பண்போடு, பிறருக்கும் பயன்படும் நெறியோடு , உயிருக்கும் அஞ்சாது
நீதிக்குப் போராடும் உணர்வோடு வாழ்ந்தால், அவரை இந்த உலகம் தெய்வமாகக் கொண்டாடும்”
என்ற உண்மையை கண்ணகி மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார் இளங்கோவடிகள்.
தமிழ்ச் சமுதாயத்தின் நல்வினைப் பயன் காரணமாக வரலாற்றுப் பின்னணியை நமக்கு
படம் பிடித்துக் காட்டும் சாசனமாக ஒரு காவிய மாளிகையைச் சமைத்துத் தந்துள்ளார்.
தமிழன் என்னும் மனவுணர்வை வளர்த்து, தமிழ் வழங்கும் நிலப்பகுதி உண்மை என நிறுபனம்
காட்டுவது சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரக் கதை சிறிதளவே கற்பனை தழுவிய வரலாறு ஆகும். காப்பியத் தலைவனும்
தலைவியும் தமிழ் இனத்தார் பெருமைப்படத்தக்க வரலாற்று நாயகியும் நாயகனுமாவர். தமிழனத்தின்
வரலாற்று களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.
தமிழர்களின் பண்பாடுகளை தெளிவாகக் காட்டும் தமிழ் நூல் சிலப்பதிகாரத்திற்குப் பின்பு
தோன்றவில்லை. இது , அந்தப் பெருங்காப்பியத்திற்குரிய தனிப்பெருமையாகும்.
ஆகவேதான் , ” நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ் நாடு ”
என்று டாக்டர் சாமிநாதய்யரும் ; ” யாமறிந்த புலவரிலே… இளங்கோவைப்போல் பூமிதனில்
யாங்கனும் பிறந்தில்லை… ” பாரதியும் சிறப்பித்துள்ளனர்.

சிலப்பதிகாரத்தின் கருப் பொருள்களாக அறிமுகப்படுத்தியவை:
” அரசியல் பிழைத்தோர்க்கு
அறங் கூற்றாவதூ உம்
உரைசால் பத்தினிக்கு
உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து
ஊட்டும் என்பதூ ஊம்…. ” கும்.

அவர் கருத்துப்படி :- (1) அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
(2) உரைச்சால் பத்தினியை உயர்ந்தோரேத்துவர்.
(3) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
என்ற மூன்றுமே ஆகும்.
எந்த இலக்கியமும் அது தோன்றிய காலத்தில் நியதிகளைக் கூறுவதோடு அமையாமல்,
பிற்காலத்திற்குத் தேவைப்படும் நீதிகளைப்போதிப்பதாகவும் இருக்கவேண்டும். சேர நாட்டு
கவிஞர் தந்த சிலப்பதிகாரத்திற்கு இந்தச் சிறப்புண்டு. ஆகவேதான் காலத்தை வென்ற
இலக்கியமாக – காப்பியமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. சிலப்பதிகாரத்திக் கதை
புனைந்துரை அன்று ; உண்மையில் நிகழ்ந்த வரலாறு. காப்பியத்தை அழகு செய்யவும்,
படிப்போர்க்கு சுவைதரவும் அங்குமிங்கும் குறைந்த அளவில் கற்பனைகளையும் வைத்துள்ளார்.

இளங்கோ கவிஞர்.
இந்த காப்பியத்திலே இளங்கோவடிகள் வெளிப்படையாகக் கூடியுள்ளவற்றை விட
இலைமறை காயென மறைத்துவைத்துதுள்ளவையே இலக்கிய நயம் மிகுந்த சுவை அதிகம்
எனலாம். அப்படி மறைக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்று கோவலனின் மதுரை பயணம் பற்றிய அந்தரங்கம்.

அதில் ”யாழிசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்த தன் விளைவாகக் கடலும்,
காவிரியும் கலக்கும் இடத்திலே பல்லாண்டு தன்னோடு கலந்து வாழ்ந்த மாதவியைப் பிரிந்து
மறுகணமே கண்ணகி இல்லத்தை நோக்கிச் செல்வது.” கண்ணகியை பல்லாண்டுகளாக பார்க்கத்
தவறி விட்டவனாதலால் அவளுடைய வாடிய மேனி அவனுக்கு வருத்தம் அளிக்கிறது. வரும்
வழியிலேயே நன்கு ஆலோசித்து எதிர்காலம் பற்றித்தான் எடுத்த முடிவை எதிர் மறையில் கண்ணகிக்கு அறிவிக்கிறான்.
அது ..

”சலம் புணர் கொள்கைச்
சலதிய டாடிக்
குலந்தரு வான்பொருள்
குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத்
தரும் எனக்கு….” – என்பதாகும்

கண்ணகியின் வாடிய மேனி அவனுக்கு வருத்ததத்தைத் தந்திருந்தும், அதனை வெளிப்படையாக
கூறாது, மதுரை செல்லும் வழியில் எங்கும் கூறாது, மாதரி இல்லத்தில் மட்டும் கூறி,
‘சிறுமுதுக் குறைவிக்கும் சிறுமையும் செய்தேன்’ என்று கூறி, கண்ணகியின் வருத்தத்தைத்
துடைக்க முயல்கிறேன். இது ஆண்களுக்குகே இருக்கிற வீம்பு அல்லது தயக்கம் எனக்கூறலாம்.
இதனை பூகாரில் கூறாது மதுரையில் கூறுவது கவிஞர் மன இயல்புகளையும் அறிந்துவைத்துள்ளார்.
கண்ணகி தேவியின் வருத்தத்தை தீர்க்க- அம்மாபத்தினி மீண்டும் வாழ்வாங்கு வாழ வாய்பளிக்க,
வாணிபம் செய்ய பொருளீட்டவும் தன் கையில் மூலதனம் இல்லை என்பதனைச் சொல்லாமல்
சொல்லுகின்றான் கோவலன். ” பாம்பறியும் பாம்பின் கால் ” என்பது போல், வணிக மகளானகண்ணகி தன் கணவன் கூறிய வாசகத்தின் உட்பொருள் அறிந்து, ” சிலம்புள, கொள்ளுங்கள் ”
எனக்கூறினாள். தன் எண்ணம் பலித்ததறிந்த கோவலன்,